Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் TNPSC GROUP 4 [2013 to 2019] – Previous Year Question & Answers

1.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)

   a. துறைமுகம்

   b. சுவரும் சுண்ணாம்பும்

   c. தேன்மழை

   d. சுரதாவின் கவிதைகள்

Answer: c. தேன்மழை

2.  பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது? (2019 G4)

   a. கண்ணகி புரட்சிக் காப்பியம்

   b. பிசிராந்தையார்

   c. சுவரும் சுண்ணாம்பும்

   d. பாண்டியன் பரிசு

Answer: b. பிசிராந்தையார்

3.  கண்ணதாசன் படைத்த நாடகம் (2018 G4)

   a. மாங்கனி

   b. ஆட்டனத்தி ஆதிமந்தி

   c. கல்லக்குடி மகா காவியம்

   d. இராசதண்டனை

Answer: d. இராசதண்டனை

4.  பொருத்துக: (2018 G4)

(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை

(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு

(c) முடியரசன் 3. கனிச்சாறு

(d) பாரதிதாசன் 4. தேன்மழை

   a. 2 3 4 1

   b. 3 4 1 2

   c. 2 4 1 3

   d. 4 3 2 1

Answer: b. 3 4 1 2

5.  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது? (2018 G4)

   a. கொய்யாக்கனி

   b. கனிச்சாறு

   c. கல்லக்குடி மாகாவியம்

   d. நூறாசிரியம்

Answer: c. கல்லக்குடி மாகாவியம்

6.  திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? (2016 G4)

   a. முருகன் அல்லது அழகு

   b. சித்திரக்கவி

   c. உரிமை வேட்டல்

   d. தமிழ்ச்சோலை

Answer: b. சித்திரக்கவி

7.  கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் (2016 G4)

   a. ஒளிப் பறவை

   b. சிரித்த முத்துக்கள்

   c. ஒரு கிராமத்து நதி

   d. நிலவுப் பூ

Answer: c. ஒரு கிராமத்து நதி

8.  `நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின் ஆசிரியர் (2016 G4)

   a. கவிஞர் மீரா

   b. கவிஞர் சுரதா

   c. கவிஞர் பெருஞ்சித்திரனார்

   d. மு. மேத்தா

Answer: c. கவிஞர் பெருஞ்சித்திரனார்

9.  “சட்டை” என்ற சிறுகதையை எழுதியவர் (2016 G4)

   a. பார்த்தசாரதி

   b. ஜெயகாந்தன்

   c. மீரா

   d. புதுமைப்பித்தன்

Answer: b. ஜெயகாந்தன்

10.  பொருத்துக: (2014 G4)

(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி

(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்

(c) காடு 3. சுரதா

(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்

   a. 4 3 2 1

   b. 2 4 3 1

   c. 3 2 4 1

   d. 1 2 3 4

Answer: c. 3 2 4 1

11.  பொருத்துக: (2014 G4)

(a) பூங்கொடி 1. கண்ணதாசன்

(b) கொடி முல்லை 2. சுரதா

(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்

(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்

   a. 2 1 4 3

   b. 1 2 3 4

   c. 3 4 1 2

   d. 4 3 2 1

Answer: c. 3 4 1 2

12.  நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர் (2016 VAO)

   (A) தாரா பாரதி

   (B) அப்துல் ரகுமான்

   (C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

   (D) மீரா

Answer: (C) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

13.  ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) பாரதியார்

   (B) பாரதிதாசன்

   (C) சுரதா

   (D) கவிமணி

Answer: (B) பாரதிதாசன்

14.  பொருத்துக : (2016 VAO)

(A) புத்தகச்சாலை – 1. வாணிதாசன்

(B) தீக்குச்சிகள் – 2. சுரதா

(C) சிக்கனம் – 3. பாரதிதாசன்

(D) காடு – 4. அப்துல்ரகுமான்

   (A) 2 1 3 4

   (B) 3 2 4 1

   (C) 3 4 2 1

   (D) 2 3 1 4

Answer: (C) 3 4 2 1

15.  பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல் (2016 VAO)

   (A) குடும்ப விளக்கு

   (B) பாண்டியன் பரிசு

   (C) இருண்ட வீடு

   (D) கள்ளோ காவியமோ

Answer: (D) கள்ளோ காவியமோ

16.  ‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) காரியாசான்

   (B) புத்தமித்திரர்

   (C) பவணந்தி முனிவர்

   (D) வீரமா முனிவர்

Answer: (B) புத்தமித்திரர்

17.  ‘திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர் (2016 VAO)

   (A) ஞானதேசிகர்

   (B) ஈசான தேசிகர்

   (C) தெய்வசிகாமணி

   (D) முத்துகுமாரசாமி

Answer: (B) ஈசான தேசிகர்

18.  பொருத்துக : (2016 VAO)

(a) தொன்னூல் விளக்கம் – 1. குமரகுருபரர்

(b) நாலடியார் – 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

(c) திருவேங்கடத்து அந்தாதி – 3. வீரமாமுனிவர்

(d) மதுரைக் கலம்பகம் – 4. சமணமுனிவர்கள்

   (A) 4 2 3 1

   (B) 3 4 2 1

   (C) 2 1 3 4

   (D) 4 3 1 2

Answer: (B) 3 4 2 1

19.  சூடாமணி நிகண்டு – ஆசிரியர் (2016 VAO)

   (A) திவாகரமுனிவர்

   (B) பிங்கலம்

   (C) வீரமண்டல புருடர்

   (D) காங்கேயர்

Answer: (C) வீரமண்டல புருடர்

20.  ‘மத்தவிலாசம்’ – என்னும் நாடக நூலை எழுதியவர் (2016 VAO)

   (A) இராஜ இராஜ சோழன்

   (B) இராஜேந்திர சோழன்

   (C) நந்திவர்மன்

   (D) மகேந்திரவர்மன்

Answer: (D) மகேந்திரவர்மன்

21.  பொருத்துக : (2016 VAO)

(A) வீரகாவியம் – 1. நா. காமராசன்

(B) இயேசு காவியம் – 2. சிற்பி. பாலசுப்ரமணியம்

(C) ஒளிப்பறவை – 3. கண்ணதாசன்

(D) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் – 4. முடியரசன்

   (A) 4 3 2 1

   (B) 3 2 1 4

   (C) 2 1 4 3

   (D) 1 2 3 4

Answer: (A) 4 3 2 1

22.  ‘அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர் (2016 VAO)

   (A) ஜெயகாந்தன்

   (B) அகிலன்

   (C) வைரமுத்து

   (D) க. சச்சிதானந்தன்

Answer: (D) க. சச்சிதானந்தன்

23.  பொருத்துக :

(A) தமிழியக்கம் – 1. பாரதியார்

(B) சீட்டுக்கவி – 2. தோலா மொழித் தேவர்

(C) சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – 3. பாரதிதாசன்

(D) சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

   (A) 1 2 3 4

   (B) 2 4 1 3

   (C) 3 1 4 2

   (D) 4 3 2 1

Answer: (C) 3 1 4 2

24.  சரியாகப் பொருத்துக : (2014 VAO)

நூலாசிரியர் – நூல்

(a) சுரதா – 1. கொடிமுல்லை

(b) முடியரசன் – 2. பள்ளிப் பறவைகள்

(c) வாணிதாசன் – 3. எச்சில் இரவு

(d) ஆலந்தூர் மோகனரங்கன் – 4. பூங்கொடி

   (A) 4 2 1 3

   (B) 3 4 1 2

   (C) 3 1 2 4

   (D) 2 3 4 1

Answer: (B) 3 4 1 2

25.  பொருந்தாத இணையைக் கண்டறிக. (2014 VAO)

ஆசிரியர் – இயற்றிய நூல்

   (A) வீரமாமுனிவர் – பரமார்த்தகுரு கதை

   (B) தேவநேயப்பாவாணர்- தமிழர் திருமணம்

   (C) திரு.வி.க. – சைவத் திறவு

   (D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை

Answer: (D) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச் சோலை

26.  பின்வருவனவற்றுள் நா. பார்த்தசாரதி எழுதிய நூலைச் சுட்டுக (2014 VAO)

   (A) கல்லுக்குள் ஈரம்

   (B) சமுதாய வீதி

   (C) யாகசாலை

   (D) முள்ளும் மலரும்

Answer: (B) சமுதாய வீதி

27.  நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக : (2014 VAO)

(A) வேதநாயகம் பிள்ளை – 1. மானவிஜயம்

(B) சூரிய நாராயண சாஸ்திரி – 2. அகலிகை வெண்பா

(C) வெ.ப. சுப்பிரமணிய முதலியார் – 3. பாரிகாதை

(D) ரா.ராகவையங்கார் – 4. நீதி நூல்

   (A) 4 1 2 3

   (B) 1 2 4 3

   (C) 3 1 2 4

   (D) 4 3 2 1

Answer: (A) 4 1 2 3

28.  பின்வரும் இணைகளில் பொருந்தாத இணையைத் தெரிந்தெடுத்து எழுதுக. (2014 VAO)

   (A) சூரிய காந்தி – நா. காமராசன்

   (B) ஞானரதம் – பாரதியார்

   (C) எழுத்து – சி.சு. செல்லப்பா

   (D) குயில்பாட்டு – பாரதிதாசன்

Answer: (D) குயில்பாட்டு – பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *