Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் [TNPSC 2020 to 2022] – Previous Year Question & Answers

Q1: திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்? (14-01-2020)

(A) கட்டபொம்மன்

(B) கர்னல் லூஸிங்டன்

(c) கர்னல் அக்னியூ

(D) மருது பாண்டியன்

Answer: (D) மருது பாண்டியன்

Q2: 1857ம் ஆண்டு சிப்பாய் கலகத்தின் முதல் பொறி ________ ல் தென்பட்டது (14-01-2020)

(A) டெல்லி

(B) பாரக்பூர்

(C) குவாலியர்

(D) கான்பூர்

Answer: (B) பாரக்பூர்

Q3: இந்தியாவின் ‘மாக்ன கார்ட்டா’ என மிதவாதிகளால் வரவேற்கப்பட்ட ஒன்று எது? (26-02-2020)

(A) ஆகஸ்ட் பிரகடனம், 1917

(B) இந்திய கவுன்சில் சட்டம், 1909

(C) இந்திய அரசாங்க சட்டம், 1919

(D) இந்திய அரசாங்கச் சட்டம், 1935

Answer: (A) ஆகஸ்ட் பிரகடனம், 1917

Q4: சரியான கால வரிசையை தருக. (26-02-2020)

I. மங்கள் பாண்டேயின் கலகம்

II. வேலூர் கலகம்

III.ஜான்சி ராணியின் தோல்வி

IV. மீரட்டில் கலகம்

(A) IV, I, II, III

(B) II, IV, I, III

(C) I, IV, III, II

(D) II, I, IV, III

Answer: (D) II, I, IV, III

Q5: பூலித்தேவனால் தோற்கப்பட்ட ஆங்கில தளபதி யார்? (26-02-2020)

(A) ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்

(B) ஜெனரல் ஷெப்பர்டு

(c) ஜெனரல் மெக்காலே

(D) ஜெனரல் வாட்சன்

Answer: (A) ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்

Q6: 1857ஆம் ஆண்டு, புரட்சி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது? (04-03-2020)

(A) வங்காள படைகளின் நடத்தை மோசமானது

(B) ஆங்கிலேய படைகள் இந்திய கடற்பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு பிரிட்டிஷ் வீரர்களுக்கு உதவி செய்தது

(C) இந்தியர்கள் மிகப்பழமையான ஆயுதங்களுடன் போர் செய்தனர்

(D) விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர்

Answer: (D) விவசாயிகள் 1857 புரட்சியில் அதிகமாக பங்கெடுத்தனர்

Q7: கீழ்க்கண்ட கூற்றுகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சரியான கூற்றுகள் எவை? (13-01-2021)

1. கட்டபொம்மன் திருவாங்கூர் மன்னர் ஆவார்

2. ஆங்கிலேயர்கள் அவரைப் பிடித்து தூக்கிலிட்டனர்

3. பாஞ்சாலங் குறிச்சியின் பாளையக்காரராக இருந்தார்.

4. புரட்சிக்குப்பின் அவருடைய ஆட்சிப்பகுதியை பெற்றுக்கொண்டார்

(A) 1 மற்றும் 2

(B) 2 மற்றும் 3

(C) 3 மற்றும் 4

(D) 4 மற்றும் 1

Answer: (B) 2 மற்றும் 3

Q8: கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது? (2021 G1)

(i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள்

(ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகபடியான வரி விதிப்பு

(iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம்

(iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மட்டும்

(D) (i), (ii), (iii), (iv)

Answer: (D) (i), (ii), (iii), (iv)

Q9: சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்த முகலாய பேரரசர் யார்? (18-04-2021)

(A) அக்பர்

(B) அவுரங்கசீப்

(C) ஜஹாங்கீர்

(D) ஷாஜகான்

Answer: (C) ஜஹாங்கீர்

Q10: (I): காங்கிரசின் பழைய தலைவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழிவுகரமான பொருளாதாரக் கொள்கை அறிந்திருந்தனர்.

(II): தாதாபாய் நௌரோஜி, ரமேஷ் சந்திரதத், டி.இ. வாச்சா மற்றும் பலர் பிரிட்டிஷ் அரசின் இந்திய பொருளாதார எதிர்ப்புக் கொள்கையை பாராட்டியுள்ளனர். (18-09-2021)

(A) (i) மட்டும் சரி

(B) (i) மற்றும் (II) சரி

(C) மற்றும் (II) தவறு

(D) மட்டும் சரி

Answer: (A) (i) மட்டும் சரி

Q11: கீழ்கண்டவற்றில் வேலு நாச்சியார் பற்றி தவறான கூற்று எது? (18-09-2021)

I. இவர் ராமநாதபுரம் இளவரசி ஆவார்.

II. இவருடைய கணவர் முத்து வடுக உடைய தேவர்

III. 1780 ஹைதர் அலி சிவகங்கையின் மீது படை எடுத்து வேலுநாச்சியாரை தோற்கடித்தார்

IV. இவர் இரண்டாம் மைசூர் போரை பயன்படுத்தி சிவகங்கைக்குள் நுழைந்தார்

(A) (i) மட்டும்

(B) (II) மட்டும்

(C) (III) மட்டும்

(D) (IV) மட்டும்

Answer: (C) (III) மட்டும்

Q12: 29 மார்ச் 1857-ல் யார் தூக்கிலிடப்பட்டார்? (18-09-2021)

(A) தாந்தியா தோப்

(B) ஜான்சி ராணி

(C) மங்கள் பாண்டே

Answer: (C) மங்கள் பாண்டே

Q13: நானா சாகேப் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மன வெறுப்பை வளர்த்து கொண்டது ஏன்? (07-11-2021)

(A) வாரிசில்லை

(B) சிறந்த நிர்வாகியல்ல

(C) ஓய்வூதியம் மறுக்கப்பட்டது

(D) துரோகி

Answer: (C) ஓய்வூதியம் மறுக்கப்பட்டது

Q14: 1921-ல் மாப்ளா கலகம் எந்த இடத்தில் நடைபெற்றது. (20-11-2021)

(A) அஸ்ஸாம்

(B) கேரளா

(C) பஞ்சாப்

(D) வங்காளம்

Answer: (B) கேரளா

Q15: கீழ்கண்ட கூற்றுகளில் தீரன் சின்ன மலையை பற்றி தவறான கூற்று எது? (08-01-2022)

1. தீரன் சின்னமலை ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டார்.

2. கொங்கு நாட்டு வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைத்தார்

3. 1802ல் மேக்ஸ்வெல் என்ற தளபதி தீரன் சின்னமலை தோற்கடித்தார்

4. இவர் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்

(A) 1 மட்டும் சரி 2, 3, 4 தவறானது

(B) 1,2 சரியானது 3,4 தவறானது

(C) 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது

(D) 1,2,3 சரியானது 4 மட்டும் தவறானது

Answer: (C) 1, 2, 4 சரியானது 3 மட்டும் தவறானது

Q16: கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துக (08-01-2022)

1. மோப்லாஹ கிளர்ச்சி

2. சந்தால் கிளர்ச்சி

3. பெரும் புரட்சி

4. சம்பாரன்

(A) 3, 2, 4, 1

(B) 2, 3, 1, 4

(C) 2, 3, 4, 1

(D) 3, 1, 4, 2

Answer: (C) 2, 3, 4, 1

Q17: கீழ்கண்டவர்களில் திண்டுக்கல் கூட்டமைப்பை சாராதவர் யார்? (11-01-2022)

I. கோபால் நாயக்கர்

II. மணப்பாறை லட்சுமி நாயக்கர்

III. தனி எதுல் நாயக்கர்

IV. சிங்கம் செட்டி

(A) II மட்டும்

(B) III மட்டும்

(C) II மற்றும் III மட்டும்

(D) IV மட்டும்

Answer: (D) IV மட்டும்

Q18: கீழ்க்கண்டவற்றில் திருச்சி பிரகடனம் பற்றி தவறான கூற்று எது? (22-01-2022)

(i) இப்பிரகடனம் மருதுபாண்டியர்களால் வெளியிடப்பட்டது

(ii) இப்பிரகடனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது

(iii) பிரகடனம் தேசிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமையவில்லை

(iv) ஆற்காடு நவாப் மற்றும் முகமது அலியின் அரசியல் நடவடிக்கைகளை இப்பிரகடனம் கண்டித்தது

(A) (i) மட்டும்

(B) (ii) மட்டும்

(C) (iii) மட்டும்

(D) (iv) மட்டும்

Answer: (C) (iii) மட்டும்

Q19: எந்த இடத்தில் அகோம் புரட்சி வெடித்தது? (26-12-2019)

a) திரிபுரா

b) பீகார்

c) சிக்கிம்

d) அஸ்ஸாம்

Answer: d) அஸ்ஸாம்

Q20: மாப்ளா கலகம் (1921) நடைபெற்ற இடம் (09-01-2019)

A) தெலுங்கானா

B) மலபார்

C) மகாராஷ்டிரா

D) குஜராத்

Answer: B) மலபார்

Q21: எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்? (2019)

a) 1735

b) 1740

c) 1741

d) 1744

Answer: c) 1741

Q22: எந்த இந்திய மன்னர் வாஸ்கோடாகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்? (2019)

a) பகுவன்லால்

b) சாமோரின்

c) ராஜேந்திர நாயர்

d) சிராஜ் – உத் – தௌலா

Answer: b) சாமோரின்

Q23: ஹேம் சந்திர காரின் பிரகடனம் _______ கிளர்ச்சிக்கு வழி வகுத்தது (12-03-2022)

(A) இண்டிகோ கிளர்ச்சி

(B) பாப்னா கிளர்ச்சி

(C) தக்காணக் கலகம்

(D) குக்கா கிளர்ச்சி

Answer: (A) இண்டிகோ கிளர்ச்சி

Q24: ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் எழுந்த சன்நியாசி அன்டோலன் கிளர்ச்சி தோன்றிய இடம் (19-03-2022)

(A) சென்னை

(B) டெல்லி

(C) காஷ்மீர்

(D) வங்காளம்

Answer: (D) வங்காளம்

Q25: சரியான விடையை தேர்ந்தெடுக :

மங்கல் பாண்டே இந்திய போர் வீரர்களை அழைத்து ஆங்கிலேயர்களை பழிவாங்க பகிரங்கமாக கூறிய நாள் (30-04-2022)

(A) 23-ம் ஜனவரி 1857

(B) 26-ம் ஜனவரி 1857

(C) 29-ம் மார்ச் 1857

(D) 8-ஆம் ஏப்ரல் 1857

Answer: (C) 29-ம் மார்ச் 1857

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *