Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC Group 4 – இந்திய அரசியலமைப்பு – Previous Year Question & Answers

1.  தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியலமைப்பு விதி எது? (16-06-2022)

   (A) விதி 20

   (B) விதி 19

   (C) விதி 18

   (D) விதி 17

Answers: (D) விதி 17

2.  கீழ்கண்டவற்றுள் தவறானது எது? (16-06-2022)

   (A) இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில் உள்ளது

   (B) 42வது சட்ட திருத்தத்தின்படி அடிப்படைக் கடமை இந்திய அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டது

   (C) 2002ஆம் ஆண்டு,82 சட்ட திருத்தத்தின் படி மேலும் ஒரு அடிப்படைக் கடமை வது சேர்க்கப்பட்டுள்ளது

   (D) பொது பிரதிநிதித்துவச் சட்டம் 1951ல் அமல்படுத்தப்பட்டது

Answers: (C) 2002ஆம் ஆண்டு,82 சட்ட திருத்தத்தின் படி மேலும் ஒரு அடிப்படைக் கடமை வது சேர்க்கப்பட்டுள்ளது

3.  சபாநாயகரால் பாராளுமன்ற அமர்வினை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகும்? (16-06-2022)

   (A) கலைப்பு

   (B) ஒத்திவைப்பு

   (C) முடிவுக்கு கொண்டு வருதல்

   (D) அழைப்பு

Answers: (C) முடிவுக்கு கொண்டு வருதல்

4.  தடுப்புக்காவலர் சட்டத்தின்படி மூன்று மாத காலத்திற்கு பிறகு செயல்படுத்த அனுமதிப்பவர் யார்? (16-06-2022)

   (A) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

   (B) இந்திய தலைமை வழக்குரைஞர்

   (C) தலைமை வழக்கறிஞர்

   (D) ஆலோசனைக்குழு

Answers: (D) ஆலோசனைக்குழு

5.  அடிப்படை உரிமைகள் பற்றிய சரியான கூற்று? (16-06-2022)

(i) நீதிமன்றம் மூலமாக நடைமுறைப்படுத்தக் கூடியது

(ii) இந்த உரிமைகள் முழுமையானது

(iii) தேசிய அளவிலான அவசர நிலையின் போது விதி 20 மற்றும் 21ன் கீழ் உள்ளவைத் தவிர மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்

(iv) இவை இந்திய குடிமக்களுக்கு மட்டும் கிடைக்கப் பெறக் கூடியதாகும்

   (A) 1, 2 மற்றும் 3

   (B) 1 மற்றும் 3

   (C) 1 மட்டும்

   (D) 1,3 மற்றும் 4

Answers: (B) 1 மற்றும் 3

6.  14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது’ – இதைக் கூறும் சட்டப்பிரிவு எது? [2022 Gr2/2A]

   (A) சட்டப்பிரிவு 27

   (B) சட்டப்பிரிவு 26

   (C) சட்டப்பிரிவு 24

   (D) சட்டப்பிரிவு 25

Answers: (C) சட்டப்பிரிவு 24

7.  அரசியல் சாசன பகுதி V-ன் V-ம் அத்தியாயம் மக்களின் (பொது) பணத்தை கண்காணிக்க நாடாளுமன்றத்தின் ஒரு உயர் அதிகாரியை நியமனம் செய்கிறது. அவர் ________ ஆவார். [2022 Gr2/2A]

   (A) இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர் .

   (B) நிதி அமைச்சர்

   (C) தலைமை தணிக்கையாளர்

   (D) பிரதம மந்திரி

Answers: (A) இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காளர் .

8.  கீழ்க்காணப்படுபவைகளில் எது “ஒன்றிய பிரதேசங்களின்” முந்தைய பெயர்கள் கிடையாது? [2022 Gr2/2A]

   (A) அட்டவணையிற் சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்

   (B) தலைமை ஆணையர்களின் மாகாணங்கள்.

   (C) பகுதி C மற்றும் பகுதி D மாநிலங்கள்

   (D) தனித்துவமான மத்திய பகுதிகள்

Answers: (D) தனித்துவமான மத்திய பகுதிகள்

9.  கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது? [2022 Gr2/2A]

   (A) சமத்துவ உரிமை

   (B) அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை

   (C) சுரண்டலுக்குண்டான உரிமை

   (D) சுதந்திர உரிமை

Answers: (C) சுரண்டலுக்குண்டான உரிமை

10.  நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை? [2022 Gr2/2A]

(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது

(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது

(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது

   (A) (i) மற்றும் (ii) சரி

   (B) (ii) மற்றும் (iii) சரி

   (C) (i) மற்றும் (iii) சரி

   (D) (i), (ii) மற்றும் (iii) சரி

Answers: (B) (ii) மற்றும் (iii) சரி

11.  நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை? [2022 Gr2/2A]

(i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது

(ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது

(iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது

   (A) (i) மற்றும் (ii) சரி

   (B) (ii) மற்றும் (iii) சரி

   (C) (i) மற்றும் (iii) சரி

   (D) (i), (ii) மற்றும் (iii) சரி

Answers: (B) (ii) மற்றும் (iii) சரி

12.  பின்வரும் கூற்றுகளில் இந்திய ஜனாதிபதி அதிகாரத்தில் எது/எவை சரியானது? [2022 Gr2/2A]

(i) குடியரசுத் தலைவரின் முன்பரிந்துரையுடன் மட்டுமே பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்

(ii) நாட்டின் நிதி நிலைத்தன்மை அல்லது கடன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது குடியரசுத்தலைவர் நிதி அவசரநிலையை அறிவிக்க முடியும் (

iii) குடியரசுத்தலைவர் தனது அலுவலகத்தின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு நீதிமன்றத்தின் முன் பொறுப்பாளி

(iv) யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்திற்கு குடியரசுத்தலைவர் பொறுப்பானவர்

   (A) (i), (iii) மற்றும் (iv) மட்டுமே சரி

   (B) (ii) மற்றும் (iii) மட்டுமே சரி

   (C) (i) மற்றும் (ii) மட்டுமே சரி

   (D) (i), (ii), (if) மற்றும் (iv) சரி

Answers: (D) (i), (ii), (if) மற்றும் (iv) சரி

13.  மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது? (2019 G4) (10th = 192) & (10th = 210)

   a. சரத்து 201

   b. சரத்து 269

   c. சரத்து 272

   d. சரத்து 268

Answers: b. சரத்து 269

14.  சரியான விடையை தேர்ந்தெடு :

இந்திய அரசியலமைப்பின் ——– சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014 G4) (10th = 188)

   a. விதி 22

   b. விதி 23

   c. விதி 24

   d. விதி 25

Answers: a. விதி 22

15.  42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4) (10th = 189)

   a. 1947

   b. 1976

   c. 1967

   d. 1958

Answers: b. 1976

16.  எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது? (2014 G4) (10th = 212 )

   a. விதி 370

   b. விதி 390

   c. விதி 161

   d. விதி 356

Answers: a. விதி 370

17.  இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது [2016 G4] (10th = 210)

   a. துணை குடியரசுத் தலைவர்

   b. குடியரசு தலைவர்

   c. பிரதம மந்திரி

   d. ஆளுநர்

Answers: a. துணை குடியரசுத் தலைவர்

18.   குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது? (2018 G4) (10th = 213, 218)

   A. 53

   B. 356

   C. 360

   D. 63

Answers: D. 63

19.  பொருத்துக.

A. ஆளுநர் 1. விதி 171

B. முதலமைச்சர் 2. விதி 170

C. மேலவை 3. விதி 153

D. சட்டசபை 4. விதி 163 (2018 G4 (10th = 200, 210)

   A. 3 2 4 1

   B. 3 4 1 2

   C. 1 4 3 2

   D. 2 3 1 4

Answers: B. 3 4 1 2

20.  சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார்? (2018 G4) (10th = 210)

   A. விதி 66

   B. விதி 67

   C. விதி 76

   D. விதி 96

Answers: C. விதி 76

21.  பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4) (10th = 188)

(a) சமத்துவ உரிமை – 1. விதிகள் 25 முதல் 28 வரை

(b) சுதந்திர உரிமை – 2. விதிகள் 14 முதல் 18 வரை

(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை – 3. விதிகள் 19 முதல் 22 வரை

(d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32

   a. 2 3 4 1

   b. 1 4 3 2

   c. 3 2 1 4

   d. 4 1 2 3

Answers: a. 2 3 4 1

22.  இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது? (2019 G4) (10th = 187)

   a. 12 – 35

   b. 19

   c. 51A

   d. 32

Answers: a. 12 – 35

23.  இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் (2019 G4) (10th = 207)

   a. குடியரசுத் தலைவர்

   b. தலைமை வழக்குரைஞர்

   c. ஆளுநர்

   d. பிரதம அமைச்சர்

Answers: a. குடியரசுத் தலைவர்

24.  அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு (2013 G4) (10th = 185)

   a. 1950

   b. 1946

   c. 1948

   d. 1947

Answers: b. 1946

25.  பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்? (2014 G4) (10th = 204)

   a. இரண்டு மாதங்கள்

   b. ஆறு வாரங்கள்

   c. 30 நாட்கள்

   d. 14 நாட்கள்

Answers: d. 14 நாட்கள்

26.  இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக. (2014 G4) (10th = 202)

I. திரு. ஜவஹர்லால் நேரு

II. திருமதி இந்திரா காந்தி

III. திரு. மொராஜ்ஜி தேசாய்

IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி

   a. I, IV, II, III

   b. I, II, III, IV

   c. IV, I, III, II

   d. II, III, IV, I

Answers: a. I, IV, II, III

27.  இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் (2016 G4) (10th = 185)

   a. டாக்டர். இராஜேந்திர பிரசாத்

   b. ஜவஹர்லால் நேரு

   c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

   d. காந்தி

Answers: c. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

28.  மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? (2019 G4) (10th = 197)

   a. 453

   b. 354

   c. 543

   d. 545

Answers: c. 543

29.  இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக (2013 G4) (10th = 199)

I. ஆர். வெங்கட்ராமன்

II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா

III. டாக்டர் கே.ஆர். நாராயணன்

IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

   a. I, II, III, IV

   b. III, IV, I, III

   c. III, I, II, IV

   d. III, II, I, IV

Answers: a. I, II, III, IV

30.  ஆளுநரை நியமிப்பவர் (2014 G4) (10th = 213)

   a. நீதிபதி

   b. பிரதம மந்திரி

   c. முதல் அமைச்சர்

   d. குடியரசு தலைவர்

Answers: d. குடியரசு தலைவர்

31.  கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: (2014 G4) (10th = 213)

கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.

காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்

   a. (A)மற்றும் (R)தவறானவை

   b. (A) தவறு மற்றும் (R) சரி

   c. (A) சரி மற்றும் (R) தவறு

   d. (A) மற்றும் (R) சரியானவை

Answers: a. (A)மற்றும் (R)தவறானவை

32.  பொருத்துக: (2016 G4) (10th = 198 )

(a) ராஜ்பவன் 1.ஜனாதிபதி

(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்

(c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள்

(d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல்

   a. 1 4 3 2

   b. 2 3 4 1

   c. 4 2 3 1

   d. 2 1 4 3

Answers: d. 2 1 4 3

33.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? (2016 G4) (10th = 215)

   a. குடியரகத் தலைவர் – அரசியலமைப்பின் பர்துகாவலர்

   b. முதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்

   c. உச்சநீதிமன்றம் – சிறப்பான அடையாளங்கள்

   d. தேசிய கீதம் – பக்கிம் சந்திர சட்டர்ஜி

Answers: b. முதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்

34.  குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (2019 G4) (10th =201 )

   a. இடைத் தேர்தல்கள்

   b. நேரடித் தேர்தல் முறை

   c. மறைமுகத் தேர்தல் முறை

   d. இடைப்பருவத் தேர்தல்கள்

Answers: c. மறைமுகத் தேர்தல் முறை

35.  பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) (10th = 213)

1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.

2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.

   a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி

   b. 1 மட்டும் சரி

   c. 2 மட்டும் சரி

   d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு

Answers: a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *