Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

பாரதியார் (49 QUESTIONS) – [2012 – 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

1.விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு – “நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்கள்‌’ என்கிறார்‌ மகாகவி பாரதியார்‌

(A) நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்களா?
(B) நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்கள்‌ என்று கூறியவர்‌ யார்‌?
(C) நமதிரு கண்கள்‌ நாடும்‌ மொழியும்‌ ஆகுமா?
(D) நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்கள்‌’ என்று பாரதியார்‌ ஏன்‌ பாடவில்லை?
(E) விடை தெரியவில்லை

Answer: (B) நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்கள்‌ என்று கூறியவர்‌ யார்‌?

2. “நெஞ்சையள்ளும்‌ சிலப்பதிகாரம்‌” எனப்‌ பாடியவர்‌

(A) இளங்கோவடிகள்‌
(B) சீத்தலைச்‌ சாத்தனார்‌
(C) பாரதியார்‌
(D) பாரதிதாசன்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (C) பாரதியார்‌

3. “பாட்டினைப்போல்‌ ஆச்சரியம்‌ பாரின்‌ மிசை இல்லையடா!” எனக்‌ கூறியவர்‌

(A) பாரதியார்
(B) சுரதா
(C) வண்ணதாசன்‌
(D) பாரதிதாசன்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (A) பாரதியார்

4. ‘நாட்டினிலும்‌ காட்டினிலும்‌ நாளெல்லாம்‌ நன்றொலிக்கும்‌ பாட்டினிலும்‌, நெஞ்சைப்‌ பறிகொடுத்தேன்‌ பாவியேன்‌’ என்ற பாரதியின்‌ வரிகள்‌ இடம்பெற்ற நூல்‌

(A) கண்ணன்‌ பாட்டு
(B) குயில் பாட்டு
(C) பாஞ்சாலி சபதம்‌
(D) பாப்பாப்‌ பாட்டு
(E) விடை தெரியவில்லை

Answer: (B) குயில் பாட்டு

5. ‘பாரதியாரின்‌ கடிதங்கள்‌’ எனும்‌. நூலைப்‌ பதிப்பித்தவர்‌ யார்‌?

(A) பரலி. ச.நெல்லையப்பர்‌
(B) பாரதிதாசன்‌. .
(C) ரா.௮. பத்மநாபன்‌
(D) சுத்தானந்த பாரதியார்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (C) ரா.௮. பத்மநாபன்‌

6. தவறான இணைகளைத்‌ தேர்ந்தெடு :

ஆசிரியர்‌ – பணியாற்றிய இதழ்கள்‌
I. ந.பிச்சமூர்த்தி – அன்னம்‌ விடு தூது
II. பாரதியார்‌ – இந்தியா, விஜயா.
III. பெருஞ்சித்திரனார்‌ – தென்மொழி, தமிழ்ச்சிட்டு
IV. மீ. இராசேந்திரன்‌ – நவ இந்தியா, ஹனுமான்‌.

Answer: II. பாரதியார்‌ – இந்தியா, விஜயா.

7. “நாடும்‌ மொழியும்‌ நமதிரு கண்கள்‌” எனப்‌ புகழ்ந்துரைத்த கவிஞர்‌

(A) தேவநேயப்‌ பாவாணர்‌
(B). சந்தக்‌ கவிமணி தமிழழகனார்‌
(C) பாரதியார்
(D) நாமக்கல்‌ கவிஞர்‌
(D) விடை தெரியவில்லை

Answer: (C) பாரதியார்

8. “நெஞ்சை அள்ளும்‌ சிலப்பதிகாரம்‌’ என்று பாடியவர்‌?

A) கவிமணி
(B) பாரதிதாசன்‌.
(C) பாரதியார்
(D) நாமக்கல்‌ கவிஞர்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (C) பாரதியார்

9. “கம்பன்‌ இசைத்த கவியெல்லாம்‌ நான்‌” என்று பெருமைப்படும்‌ கவிஞர்‌ யார்‌?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்‌
(C) கண்ணதாசன்‌
(D) கம்பதாசன்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (A) பாரதியார்

10. ‘சந்திரமண்டலத்தியல்‌ கண்டுதெளிவோம்‌’ எனப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) வண்ணதாசன்‌
(D) காளிதாசன்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (A) பாரதியார்‌

11. முதன்‌ முதலில்‌ “புதிய ஆத்திசூடி’யைப்‌ பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) வாணிதாசன்‌
(D) மு. வரதராசன்‌

Answer: (A) பாரதியார்‌

12. “யெளவனம்‌ காத்தல்‌ செய்‌’- என்ற வரி இடம்‌ பெறும்‌ நூல்‌

(A) புதிய ஆத்திசூடி
(B) ஆத்திகுடி
(C) வாக்குண்டாம்‌
(D) நன்னெறி

Answer: (A) புதிய ஆத்திசூடி

13. “புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர்‌

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்‌
(C) புதுமைப்பித்தன்‌
(D) வாணிதாசன்‌
(E) விடைதெரியவில்லை

Answer: (A) பாரதியார்

14. “நமக்குத்‌ தொழில்‌ கவிதை நாட்டிற்குழைத்தல்‌” என்று முழக்கமிட்டவர்‌

(A) சி. சுப்பிரமணிய பாரதியார்‌
(B) பாரதிதாசனார்‌
(C) உ.வே.சா. ஐயர்‌
(D) கவிமணிதேசிக விநாயகம்‌ பிள்ளை

Answer: (A) சி. சுப்பிரமணிய பாரதியார்‌

15. “நமக்குத்‌ தொழில்‌ கவிதை நாட்டிற்கு உழைத்தல்‌” என்று பாடியவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) வாணிதாசன்‌
(D) கண்ணதாசன்‌

Answer: (A) பாரதியார்‌

16. “நமக்குத்தொழில்‌ கவிதை நாட்டிற்குழைத்தல்‌ இமைப்‌ பொழுதும்‌ சோராதிருத்தல்‌”- என்று கூறியவர்‌

(A) கவிமணி
(B) பாரதியார்‌
(C) சுரதா
(D) முடியரசன்‌

Answer: (B) பாரதியார்‌

17. பொருத்துக :

(a) கம்பர்‌ – 1. பாஞ்சாலி சபதம்
(b) ஒட்டக்கூத்தர் – 2. குடும்ப விளக்கு
(c) பாரதிதாசன்‌ – 3. இராசராச சோழனுலா
(d) பாரதியார்‌ – 4. சரசுவதி அந்தாதி

Answer: (a) 4, (b) 3, (c) 2, (d) 1

18. நூல்கள்‌- நூலாசிரியர்கள்‌ – பொருத்துக.

(a) அழகின் சிரிப்பு 1. நாமக்கல் கவிஞர்
(b) தெய்வத் திருமலர் 2. பாரதியார்
(c) பாவியக் கொத்து 3. பாரதிதாசன்
(d) கண்ணன் பாட்டு 4. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

19. பாரதியார்‌ இயற்றிய ஞானரதம்‌ என்னும்‌ நூல்‌ ————————– வகையைச் சார்ந்தது

(A) சமய இலக்கியம்‌
(B) கவிதை இலக்கியம்‌
(C) உரைநடை இலக்கியம்‌
(D) நாடக இலக்கியம்‌

Answer: (C) உரைநடை இலக்கியம்‌

20. ‘வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு’ – என்ற தொடரை எழுதியவர்‌ யார்‌?

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) கவிமணி
(D) சுரதா

Answer: (A) பாரதியார்‌

21. “யாமறிந்த புலவரிலே இளங்கோவைப்‌ போல்‌” – என இளங்கோவைப்‌ புகழ்ந்து பாடியவர்‌ யார்‌?

(A) வாணிதாசன்‌
(B) கணியன்‌
(C) பாரதியார்‌
(D) பாரதிதாசன்‌

Answer: (C) பாரதியார்‌

22. ‘ஓரூருக்கொருநாட்டுக்‌ குரிய தான ஓட்டைச்‌ சாண்‌ நினைப்புடையர்‌ அல்லர்‌’- யார்‌?

(A) கவிமணி
(B) கண்ணதாசன்‌
(C) பாரதிதாசன்‌
(D) பாரதியார்

Answer: (D) பாரதியார்

23. பாரதியார்‌ யாருடைய சாயலில்‌ வசனகவிதை எழுதிட தொடங்கினார்‌?

(A) ஜார்ஜ் எல்‌. ஹார்ட்‌
(B) வால்ட்விட்மன்‌
(C) வின்ட்ஹோம்‌
(D) ஹால்‌ சிப்மேன்‌

Answer: (B) வால்ட்விட்மன்‌

24. பொருந்தாத இணையைக்‌ கண்டறிக:

(A). சிறுபஞ்சமூலம்‌ – காரியாசான்‌
(B) ஞானரதம்‌- பாரதியார்‌
(C) எழுத்து- சி.சு.செல்லப்‌பா
(D) குயில்பாட்டு – கண்ணதாசன்‌

Answer: (D) குயில்பாட்டு – கண்ணதாசன்‌

25. “நெஞ்சை அள்ளும்‌ சிலப்பதிகாரம்‌’ என்று பாடியவர்‌

(A) இளங்கோவடிகள்‌
(B) பாரதிதாசன்‌
(C) பாரதியார்‌
(D) கவிமணி

Answer: (C) பாரதியார்‌

26. “வயிரமுடைய நெஞ்சு வேணும்‌” எனக்‌ கூறிய கவிஞர்‌

(A) பாரதிதாசன்‌
(B) கவிமணி
(C) பாரதியார்‌
(D) அழ. வள்ளியப்பா

Answer: (C) பாரதியார்‌

27. ‘நாமார்க்கும்‌ குடியல்லோம்‌’ என்னும்‌ பாடல்‌ யாரை ‘அச்சமில்லை அச்சமில்லை’ எனப்‌ பாடத்‌ தூண்டியது?

(A) பாரதிதாசன்‌
(B) சுரதா
(C) பாரதியார்‌
(D) வெ.இராமலிங்கம்‌

Answer: (C) பாரதியார்‌

28. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்‌’ கம்பரைப்‌ புகழ்ந்து பாடியவர்‌ யார்‌?

(A) பாரதிதாசன்‌
(B) பாரதியார்‌
(C) சுரதா
(D) வாணிதாசன்‌

Answer: (B) பாரதியார்‌

29. பாரதியார்‌ வசன கவிதை எழுத உந்துதலாய்‌ இருந்த அமெரிக்கக்‌ கவிஞர்‌

(A) வால்ட் விட்மன்‌
(B) ஹோர்ட்ஸ்வொர்த்‌
(C) கீட்ஸ்‌
(D) ஷேக்ஸ்பியர்‌

Answer: (A) வால்ட் விட்மன்‌

30. பொருத்துக:

(a) தமிழியக்கம்‌ 1. பாரதியார்‌
(b) சீட்டுக்கவி 2. தோலா மொழித்தேவர்‌
(c) சேக்கிழார்‌ பிள்ளைத்தமிழ்‌ 3. பாரதிதாசன்‌
(d) சூளாமணி 4. மகா வித்துவான்‌ மீனாட்சி சுந்தரம்‌ பிள்ளை

Answer: (a)3, (b)1, (c)4, (d) 2

31. பொருத்துக: நூல்‌ – ஆசிரியர்‌

(a) பாண்டியன்‌ பரிசு 1. பாரதியார்‌
(b) குயில்பாட்டு 2. நாமக்கல்‌ கவிஞர்‌
(c) ஆசியஜோதி 3. பாரதிதாசன்‌
(d) சங்கொலி 4. கவிமணி.

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

32. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்?

(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) திரு.வி.க
(D) முடியரசன்

Answer: (B) பாரதியார்

33. எளிய மக்களை நோக்கிக்‌ கவிதைக்‌ கருவியைத்‌ திருப்பி அமைத்த பெருமை, யாரைச்‌ சாரும்‌?

(A) பாரதிதாசன்‌
(B) பாரதியார்‌
(C) நாமக்கல்‌ கவிஞர்‌
(D) கவிமணி

Answer: (B) பாரதியார்‌

34. “பெற்ற தாயும்‌ பிறந்த பொன்னாடும்‌ நற்றவ வானினும்‌ நனி சிறந்தனவே” எனும்‌ பாடலடிகள்‌ யாருடையது?

(A) புரட்சிக்கவிஞர்‌
(B) தேசியக்கவி
(C) காந்தியக் கவிஞர்‌
(D) கவிமணி

Answer: (B) தேசியக்கவி

35. நூலாசிரியரோடு நூலைப்‌ பொருத்துக :

(a) சுத்தானந்த பாரதி 1. ஞானரதம்‌
(b) வ.வே.சு ஐயர்‌ 2. ஏழைபடும்‌ பாடு
(c) சுப்பிரமணிய பாரதி 2. விநோதரஸ மஞ்சரி
(d) வீராசாமி செட்டியார்‌ 4. கமலவிஜயம்

‌Answer: (a)2, (b)4, (c)1, (d)3

35. பின்வரும்‌ இணைகளில்‌ பொருந்தாத இணையைத்‌ தெரிந்தெடுத்து எழுதுக.

(A) சூரிய காந்தி – நா.காமராசன்‌
(B) ஞானரதம்‌ – பாரதியார்‌
(C) எழுத்து – சி.சு.செல்லப்பா
(D) குயில்பாட்டு – பாரதிதாசன்‌

Answer: (D) குயில்பாட்டு – பாரதிதாசன்‌

36. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத்‌ தேர்க :

(A) விடுதலைக்கவி 1. அப்துல்‌ ரகுமான்‌
(B) திவ்வியகவி 2. வாணிதாசன்‌
(C) கவிஞரேறு 3. பாரதியார்‌
(D) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள்‌ ஐயங்கார்

‌Answer: (a)3, (b)4, (c)2, (d)1

37. பாரதிக்கு ‘மகாகவி’-என்ற பட்டம்‌ கொடுத்தவர்‌ யார்‌?

(A) வ.ரா.
(B) உ.வே.சா
(C) கி.ஆ.பெ.வி
(D) லா.ச.ரா

Answer: (A) வ.ரா.

38. ‘ஷெல்லிதாசன்‌’ என்று தன்னைக்‌ கூறிக்‌ கொண்டவர்‌ யார்‌?

(A) சுப்பிரமணிய பாரதியார்‌
(B) சுத்தானந்த பாரதியார்‌
(C) சோமசுந்தர பாரதியார்‌
(D) சுப்ரமணிய சிவா

Answer: (A) சுப்பிரமணிய பாரதியார்‌

39. “திலகர்‌ விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர்‌ யார்‌?

(A) காந்திதி
(B) நேருஜி
(C) இராஜாதி
(D) நேதாஜி

Answer: (C) இராஜாதி

40. கீழ்க்காண்பவர்களுள்‌ ‘சீட்டுக்கவி’ எழுதியவர்‌

(A) நாமக்கல்‌ கவிஞர்‌
(B) சுப்பிரமணிய பாரதியார்‌
(C) கவிமணி தேசிக விநாயகம்‌ பிள்ளை
(D) உவே: சுவாமிநாத ஐயர்‌

Answer: (B) சுப்பிரமணிய பாரதியார்‌

41. பொருத்துக: சிறப்புப்‌ பெயர்களை ஆசிரியர்களோடு பொருத்துக

சிறப்புப்‌ பெயா்‌ – ஆசிரியர்

(a) தேசியக்கவிஞர்‌ (1) தேசிக விநாயகம்‌ பிள்ளை
(b) புரட்சிக்கவிஞர்‌ (2) நாமக்கல்‌ கவிஞர்‌
(c) காந்தியக்‌ கவிஞர்‌ (3): பாரதியார்‌
(d) கவிமணி (4) பாரதிதாசன்

‌Answer: Answer: (a)3, (b)4, (c)2, (d)1

42. “நீடு துயில் நீக்க பாட வந்த நிலா” என்ற தொடரால்‌ அழைக்கப்‌ பெறுபவர்‌

(A) பாரதிதாசன்‌
(B) கவிமணி
(C) பாரதியார்‌
(D) புகழேந்திப்‌ புலவர்‌

Answer: (C) பாரதியார்‌

43. தற்காலத்‌ தமிழிலக்கியத்தின்‌ விடிவெள்ளி எனப்‌ புகழப்படுபவர்‌

(A) பாரதியார்‌
(B) பாரதிதாசன்‌
(C) வைரமுத்து
(D) முடியரசன்‌

Answer: (A) பாரதியார்‌

44. Fill in the blanks – கோடிட்ட இடத்தை நிரப்புக:

Seena misiram yavanaragam – innum
Desam Palavum pugazhveesi — kalai
Gnanam padaithozhil Vanibamum — miga
Nandru Valartha _________

சீன மிசிரம்‌ யவனரகம்‌ – இன்னும்‌ தேசம்‌ பலவும்‌ புகழ்வீசிக்‌ – கலை ஞானம்‌ படைத்தொழில்‌ வாணிபமும்‌ – மிக நன்று வளர்த்த _________

(A)Tamil Nadu (தமிழ்நாடு)
(B) Desiya Thirunadu (தேசியத்‌ திருநாடு)
(C) Navalam Nannadu (நாவலம்‌ நன்நாடு)
(D) Thainadu (தாய்நாடு)
(E) Answer not known (விடை தெரியவில்லை)

Answer: (A)Tamil Nadu (தமிழ்நாடு)

45. ‘Senthamizh Thenee, Sindhukku Thandhai Kuvikkum Kavidhai Kuyil! Innattinai Kavizhkkum Pagaiyai Kavizhkkum Kaviyarasu’

Who are the two poets associated with the lines above?

“செந்தமிழ்த்‌ தேனீ, சிந்துக்குக்குத்‌ தந்தை!
குவிக்கும்‌ கவிதைக்‌ குயில்‌! இந்நாட்டினைக்‌

கவிழ்க்கும்‌ பகையைக்‌ கவிழ்க்கும்‌ கவியரசு”

இந்தப்‌ பாடலோடு தொடர்புடைய இருவர்‌ யார்‌?

(A) Barathiyaar, Abdul Raguman (பாரதியார்‌, அப்துல்‌ ரகுமான்‌)
(B) Kalaignar Karunanidhi, Vairamuthu (கலைஞர்‌ கருணாநிதி, வைரமுத்து)
(C) Kannadasan, Pattukkottai Kalyana Sundaram ( கண்ணதாசன்‌, பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்‌)
(D) Barathiyaar, Baradhidasan (பாரதியார்‌, பாரதிதாசன்‌)
(E) Answer not known (விடை தெரியவில்லை)

Answer: (D) Barathiyaar, Baradhidasan (பாரதியார்‌, பாரதிதாசன்‌)

46. Match the following Editors to their Magazines : கீழ்கண்டவற்றுள்‌ ஆசிரியர்களை அவர்களின்‌ இதழ்களுடன்‌ பொருத்துக :

Editors Magazines : ஆசிரியர்‌ இதழ்‌

(a) Thiru. Kalyanasundharanar (திரு.வி.க.) 1. Deepam (தீபம்‌)

(b) Bharathiyar (பாரதியார்‌) 2. Desabakthan (தேசபக்தன்‌)

(c) Bharathidasan (பாரதிதாசன்‌) 3. Vijaya (விஜயா)

(d) Na. Parthasarathy (நா. பார்த்தசாரதி) 4. Kuyil (குயில்‌)

(E) Answer not known (விடை தெரியவில்லை)

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

47. எந்த தமிழ்‌ கவிஞர்‌ தேசியம்‌ மற்றும்‌ தேசிய ஒருமைப்பாட்டில்‌ உணர்வுகளை தூண்டினார்‌?

(A) பாரதிதாசன்‌
(B) பாரதியார்‌
(c) சுதானந்தபாரதி
(D) கவிமணி
(E) விடைதெரியவில்லை

Answer: (B) பாரதியார்‌

48. சுப்பிரமணிய பாரதியார்‌ தனது இளமைப்‌ பருவத்தில்‌ இருந்தே கவிதை படைக்கும்‌ ஆற்றல்‌ உடையவராக இருந்தார்‌. அவருக்கு “பாரதி” என்ற பட்டம்‌ வழங்கப்பட்டது. அப்பட்டம்‌ வழங்கிய மன்னன்‌ யார்‌? அப்பொழுது பாரதியின்‌ வயது என்ன?

(A) இராமநாதபுரம்‌ மன்னரால்‌ பாரதியின்‌ பத்தாவது வயதில்‌ வழங்கப்பட்டது
(B) எட்டயபுர மன்னரால்‌ பாரதியின்‌ பதினோராவது வயதில்‌ வழங்கப்பட்டது
(C) சிவகங்கை மன்னரால்‌ பாரதியின்‌ பன்னிரெண்டாவது வயதில்‌ வழங்கப்பட்டது
(D) புதுக்கோட்டை மன்னரால்‌ பாரதியின்‌ பதிமூன்றாவது வயதில்‌ வழங்கப்பட்டது
(E) Answer not known
விடை தெரியவில்லை

Answer: (B) எட்டயபுர மன்னரால்‌ பாரதியின்‌ பதினோராவது வயதில்‌ வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *