Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு எப்படி இருக்கும்? முழு விவரங்கள்

முதனிலை தேர்வு முடிவுகள் வரும் தேதியில் இருந்து குறைந்தது 3 மாதத்திற்குள் அதன் முதன்மைத் தேர்வு வந்து விடும். இன்று வரை ஏதும் தயார் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்போதிருந்து ஆரம்பியுங்கள்.

முதன்மை தேர்வின் பேட்டன் என சொல்லப்படும் வரைமுறைகளை முதலில் தெரிந்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

முதன்மைத் தேர்வு 2 தாள்களாக நடக்கும்.

தாள் 1: கட்டாயத் தமிழ்

மொழிபெயர்த்தல் :

(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்

  • சுருக்கி வரைதல்
  • பொருள் உணர்திறன்
  • சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
  • கட்டுரை வரைதல் : திருக்குறள் தொடர்பாக
  • கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)
  • தமிழ் மொழி அறிவு ஆகியவை அடங்கும் அடங்கும்

இந்த தாள் 100 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த தாளில் குறைந்தது 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் தான் தாள் 2 ஐ மதிப்பீடு செய்வார்கள். இல்லையேல் மதீப்பீட்டிற்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

Click Here to Download Group 2 Notes

தாள் 2 பொது அறிவு: இளநிலை கல்வி தரத்தில் இருக்கும்

இந்த தாளில்,

  • தற்கால நிகழ்வுகள்
  • சமுதாயப் பிரச்சனைகள்
  • சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  • இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  • அறிவியலும் தொழில் நுட்பமும்
  • கலையும் பண்பாடும்
  • பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
  • இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.

தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு ஆகியவை அடங்கும்.

இந்த தாள் 300 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் நடைபெறும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு இந்த தாளில் குறைந்தது 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். நேர்முகத்தேர்வு உள்ள பதவிகளுக்கு 40 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். அதோடு சேர்த்து குறைந்தது 103 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *