சிற்றிலக்கியங்கள் உலா – TNPSC Questions 2024
இரண்டாம் இராஜராஜ சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனாவான். தக்கயாகப் பரணி உருவாகக் காரணம் ஆனவனும் இவனே. இவன் கி.பி. 1146-இல் அரசு கட்டில் ஏறியுள்ளான். இவனுக்குப் பல பட்டப் பெயர்கள் உண்டு. சோழேந்திர சிம்மன், கண்டன், இராச கம்பீரன், திரிபுவனச் சக்கரவர்த்தி முதலியன.
இவன் காலத்தில் கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டது. இக்கோயில் சிற்பங்களால் புகழ் பெற்றுத் திகழ்கின்றது. தாராசுரம் சோழர் காலத்தில் இராஜராஜபுரம் என்று அழைக்கப்படடது. இக்கோயிலில் நாயன்மார் அறுபத்து மூவர் உருவங்கள் சிற்பங்களாக உள்ளன. ஒட்டக்கூத்தர் சிலையும் உள்ளது. இரண்டாம் ராஜ ராஜ சோழனின் காலத்தில் சேரர்களுடன் வஞ்சி மாநகரில் பெரும் போர் நிகழ்ந்ததாக தக்கையாப் பரணி மூலம் அறியலாம். சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரிதனை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இராசராச சோழன் உலா கூறுகின்றது. இந்தப் போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும் சோழர் படைதனை பல்லவராயன் பெருமான் நம்பி என்பவன் தலைமை தாங்கி சென்று, போரை வென்றுள்ளான்.
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். இராசராச சோழன் உலாவில் வரும்
“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்”
என்ற வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனிப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான். ஆனால் இவன் எந்த மன்னன் மீது படை எடுத்து சென்றான் என்று குறிப்பிடப்பட வில்லை.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்- Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇