![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-8-1.png)
சிறுகதைகள் Notes TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-8-1-1024x570.png)
சிறுகதைகள் Notes TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
சிறுகதைகள்
சிறுகதை இலக்கணம்:
· ஒரே மூச்சில் படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
· படிப்போரை ஈர்க்கும் விதமாக சொற்கள் இருக்க வேண்டும்.
· வருணனை உரையாடல் சுருக்கமாக இருக்க வேண்டும்.
· ஒரே கருத்து நிலை நாட்ட வேண்டும்.
· மனப்போராட்டம், சிக்கல்,பண்பு மூன்றில் ஒன்றை மட்டும் விளக்குவதாக இருக்க வேண்டும்.
· படிப்போர் உள்ளம் நம்பத் தகுந்ததாக இருக்க வேண்டும்.
· கண் முன் நடப்பது போல் இருக்க வேண்டும்.
· புதினம், குறும்புதினம் இவற்றைவிட சிறியதாக இருக்க வேண்டும்.
தமிழ் இலக்கண, இலக்கியத்தில் சிறுகதைக் குறிப்புகள்:
· முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்
– “பொருளோடு புணர்ந்த புணர்மொழி”
– நூற்பா அடிகள் சிறுகதை பற்றி குறிப்பிடுவதாகும்.
· சங்க இலக்கியத்தில் சிறுகதைகள் “கிளைக் கதைகளாக” விரவிக் காணப்படுகின்றன.
· சிறுகதைகள் “கிளைக் கதைகள்” என்ற பொருளில் காப்பியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.
சிறுகதையின் தொன்மை:
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்திற்கு முன்பாகவே மக்களால் வாய்மொழியாகவும் செவி வழிச் செய்திகளாகவும் பேசப்பட்டு வந்தன. தான் கற்றுக் கொண்ட அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். காலத்திற்கு ஏற்ப கதாப்பாத்திரங்கள் மாறிவிடும். ஆனால் கரு(மையக் கருத்து) மாறாது. அதனால் தான் சிறுகதைகள் மக்கள் மத்தியில் மதிப்பு பெற்று நிற்கிறது.
இதுவே எதிர்காலத்தில் ஆங்கிலேயர் தொடர்பாலும், சுதந்திரம் பெற்றதாலும் இது ஒரு இலக்கியமாக வடிவம் பெற்றது.
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு ‘களம்’ அமைத்துக் கொடுத்தது ‘மணிக்கொடி’ என்ற சிற்றிதழ் ஆகும். இது டி.எஸ்.சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதி வெளியிட்டனர்.
சிறுகதை முதன்மைகள்:
· முதலில் சிறுகதை இலக்கியமாக தோன்றிய நாடு அமெரிக்கா.
· உலகின் முதல் சிறுகதை “ரிப் வான் விங்க்லே” இதன் ஆசிரியர் இர்லிங். இடம் : வாசிங்டன்
· உலகின் முதல் சிறுகதைத் தொகுதி “த ஸ்கெட்ச் புக்” ஆண்டு 1819.
· சிறுகதை உலகின் தந்தை செகாவ்
· சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளம்
· உலகச் சிறுகதை முன்னோடிகள் ஆலன்போ, கோகல்.
தமிழில் சிறுகதை முன்னோடிகள்:
· தமிழில் முதல் சிறுகதை “குளத்தங்கரை அரசமரம்” (ஆசிரியர் : வ.வே. சுப்ரமணிய ஐயர்)
· முதல் சிறுகதைத் தொகுதி “மங்கையர்க்கரசியின் காதல்” (ஆசிரியர் : வ.வே.சு. ஐயர்)
· சிறுகதையின் தந்தை “வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர்”.
· சிறுகதை மன்னன் “புதுமைப்பித்தன்”
· தமிழ்நாட்டு மாப்பசான் புதுமைப்பித்தன் (சொ.விருத்தாச்சலம்)
· தமிழ்ச்சிறுகதை முன்னோடி “வீரமா முனிவர்”
· சிறுகதையின் திருமூலர் மௌனி (சுப்ரமணியம்), ந.பிச்சமூர்த்தி என்றும் கூறுவர்.
· தமிழ்நாட்டின் “வால்டர் ஸ்காட்” கல்கி (இரா.கிருஷ்ணமூர்த்தி).
· இவர் திரு.வி.கலியாண சுந்தரத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் ‘கல்கி’ என மாற்றிக் கொண்டார்.
· கரிசல் கதைகளின் தந்தை கி.இராஜநாராயணன்.
தமிழில் அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்:
· 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் பிரெஞ்சு மொழியில் இருந்து மொழி பெயர்த்து எழுதியது “பரமார்த்த குரு கதை”.
· இசுலாமிய மதத்தின் சூஃபிகள் என்பவர் சித்தர்களோடு ஒப்பாக பேசப்படுவார்கள். அவர்கள் கூறிய கதைகளுள் ஒன்று “சூஃபிக் கதைகள்”.
சிறுகதை ஆசிரியர்கள் – படைப்புகள்:
வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர் (1881 – 1925)
குளத்தங்கரை அரசமரம் – இது தாகூரின் “காட்டேர் இது கதா” என்ற வங்க மொழியின் கதைத் தழுவல்
மங்கையர்கரசி காதல் – இது 8 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகும்.
இதில் அடங்கியசிறுகதைகளின் பெயர்கள்
1. மங்கையர்க்கரசியின் காதல்
2. குளத்தங்கரை அரசமரம்
3. கமலா விஜயம்
4. காங்கேயம்
5. அழேன் ழக்கே
6. எதிரொலியாள்
7. அனார்கலி
8. லைலா மஜ்னு
மொழிபெயர்ப்பு கதைகள்
காபூலி வாலா இது தாகூரின் படைப்பிலிருந்து கதைத் தழுவலாக எழுதப்பட்டது.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇