![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-1-1.png)
நாலாயிர திவ்விய பிரபந்தம் TNPSC PREVIOUS YEAR QUESTIONS-2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-1-1-1024x570.png)
நாலாயிர திவ்விய பிரபந்தம் TNPSC PREVIOUS YEAR QUESTIONS-2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
திவ்ய எனும் சொல் “மேலான” என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.
தொகுத்தவர் – நாதமுனி
காலம் – பல்லர் காலம்
பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்றது
1) பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி
2) பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி மூவரும் முதலாழ்வார் எனப்படுவர்
3) பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி
4) திருமழிசையாழ்வார் – நான்காம் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
5) நம்மாழ்வார் – திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
6) மதுரகவியாழ்வார் – கண்ணிநுண் சிறுத்தாம்பு (பதிகம்)
7) பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
8) ஆண்டாள் – திருப்பாவை, நாச்சியார் திருமொழி
9) திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
10) தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
11) திருப்பாணாழ்வார் – அமலனாதிப் பிரான் (பதிகம்)
12) குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி
திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
1) திருப்பல்லாண்டு
2) பெரியாழ்வார் திருமொழி
3) திருப்பாவை
4) நாச்சியார் திருமொழி
5) பெருமாள் திருமொழி
6) திருச்சந்த விருத்தம்
7) திருமாலை
8) திருப்பள்ளி எழுச்சி
9) அமலனாதிபிரான்
10) கண்ணிநுண்சிறுத்தாம்பு
11) பெரிய திருமொழி
12) திருக்குறுந்தாண்டகம்
13) திருநெடுந்தாண்டகம்
14) முதல் திருவந்தாதி
15) இரண்டாம் திருவந்தாதி
16) மூன்றாம் திருவந்தாதி
17) நான்முகன் திருவந்தாதி
18) திருவிருத்தம்
19) திருவாசிரியம்
20) பெரிய திருவந்தாதி
21) திருஎழுகூற்றிருக்கை
22) சிறிய திருமடல்
23) பெரிய திருமடல்
24) இராமானுச நூற்றந்தாதி
சில குறிப்புகள்
· திருமாலை முழு கடவுளாகக் கொண்ட சமயம் வைணவம்
· ‘நாக் கொண்ட மானிடம் பாடேன்’ என்று கூறியவர் திருமழிசையாழ்வார்
· ‘வாய்க் கொண்டு மானிடன் பாடவந்த கவியேனல்லன்’ என்று பாடியவர் நம்மாழ்வார்
· மடல் இலக்கியத்தில் புதுமை செய்தவர் திருமங்கையாழ்வார்
· முதலாழ்வார் மூவரும் சந்தித்த இடம் திருக்கோவிலூர் இடைக்கழி.
· பிள்ளைத்தமிழுக்கு வித்திட்டவர் பெரியாழ்வார்.
· இராமன் மீது தாய் நிலையில் நின்று பாடியவர் குலசேகர ஆழ்வார்.
· பன்னிரு ஆழ்வார்களுள் பெண் அடியார் ஆண்டாள்.
· பாம்புப் படுக்கையில் இருந்த இறைவனைத் தன்னோடு அழைத்துச் சென்றவர் திருமழிசையாழ்வார்.
· குலசேகர ஆழ்வார் சிறப்புடன் பாடிய அவதாரம் இராம அவதாரம்.
· திருமால் கையில் உள்ள சக்கரம் அதர்வனச்சக்கரம்.
· திருமால் கையில் உள்ள சங்கு பாஞ்சசன்யம்.
· ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்’ என்றவர் நம்மாழ்வார்.
· முழுமைக்கும் உரை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇