Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

தேம்பாவணி TNPSC PREVIOUS YEAR QUESTIONS-2024

தேம்பாவணி TNPSC PREVIOUS YEAR QUESTIONS-2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாதமாலை என்றும்,

தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்றும் இந்நூலுக்குப் பொருள்

கொள்ளப்படுகின்றது. கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப்பினைப் (வளனை) பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் இது. இப்பெருங்காப்பியம் 3 காண்டங்களையும் 36 படலங்களையும் உள்ளடக்கி, 3615 பாடல்களைக் கொண்டுள்ளது.

17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது தேம்பாவணி. இக்காப்பியத்தை இயற்றியவர் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி. தமிழின் முதல் அகராதியான சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இவர் படைத்துள்ளார்.

· இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் இக்காப்பியத் தலைவராவார்.

· தேம்பாவணி கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

· இந்நூல் சூசையப்பர், மேரியம்மையின் இல்லற வாழ்வைச் சிறப்பித்தும், துறவற வாழ்வின் மேம்பாட்டை விளக்கியும் எழுதப் பெற்றுள்ளது.

· காப்பியத்தில் வரும் பாலஸ்தீனமும் ஜெருசலமும் தமிழ் நிலங்களாகவே இங்கு வருணிக்கப்படுகின்றன.

ஆசிரியர் – வீரமாமுனிவர் (மதுரை சுப்ரதீபக் கவிராயரின் மாணவர்)

இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

பெரும்பிரிவு – காண்டம் (3)

உட்பிரிவு – படலம் (36)

பாடல்கள் – 3615

சமயம் – கிறித்துவம்

காலம் – கி.பி.18ம் நூற்றாண்டு

· பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற தமிழ்க் காப்பியங்களைப் பின்பற்றி நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவை நூலின் தொடக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

· ஜோசப், ஜான், ஐசக் முதலான பெயர்களெல்லாம் முறையே வளன், தருணையன், நகுலன் எனத் தமிழ்ப் பெயர்களாக மாற்றம் அடைகின்றன.

· திருக்குறள் தொடர்களும், கம்பராமாயணத் தொடர்களும் காப்பியத்தில் பல இடங்களில் அமைந்துள்ளன.

பசுந்தங்கம், புதுவெள்ளி, மாணிக்கம், மணிவைரம் யாவும் ஒரு தாய்க்கு ஈடில்லை என்கிறார் ஒரு கவிஞர். தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்துறும் துயரம் பெரிது. மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பெருகும்; துயரைப் பகிர்ந்தால் குறையும்; சுவரோடாயினும் சொல்லி அழு என்பார்களல்லவா? துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள்! சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் எத்தனை ஆறுதல்!.

முன்நிகழ்வு

கிறித்து விற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் குறிப்பிடுவர். இவரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி. வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டுள்ளார். கருணையன் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்துவிட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி ஆறுதல் அளிப்பதை இப்பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

Download PDF File Below 👇👇👇

Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *