Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

நந்திகலம்பகம் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024

நந்திகலம்பகம் – TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.

நந்திக் கலம்பகம் ஆசிரியர் குறிப்பு : 

தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப்பெறவில்லை. 

நந்திக் கலம்பகம் நூற்குறிப்பு :

கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியத்தில் ஒன்று. 

நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது. 

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. 

இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. 

கலம்பக நூல்களில் நந்திக்கலம்பகம் முதல் நூல் என்பர்.

கலம்பகம் பெயர்க்காரணம் தருக

கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெறும் நூல் கலம்பகம் எனப்படும்.

கலம்பகம் பிரித்து எழுதுக

  • கலம் + பகம் = கலம்பகம். 
  • கலம் – பன்னிரண்டு; 
  • பகம் – ஆறு.

கலம்பகம் உறுப்புகள் யாவை

பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால்,

  1. புயவகுப்பு, 
  2. அம்மானை, 
  3. கார், 
  4. ஊசல், 
  5. இரங்கல், 
  6. மறம், 
  7. தழை, 
  8. தவம், 
  9. சித்து, 
  10. பாண், 
  11. கைக்கிளை, 
  12. தூது,
  13.  வண்டு, 
  14. குறம், 
  15. காலம், 
  16. மாதங்கி, 
  17. களி, 
  18. சம்பிரதம் 

கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

Download PDF File Below 👇👇👇

Download PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *