![](https://examstar.in/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-20-at-12.16.29-PM.jpeg)
TNPSC குரூப் 4 – க்கு இலவச மாதிரித் தேர்வு – கல்வி விகடன்
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-20-at-12.16.29-PM-1024x576.jpeg)
TNPSC Group 4 – குரூப் 4-க்கு இலவச மாதிரித் தேர்வு – கல்வி விகடன்
TNPSC Group 4 – குரூப் 4-க்கு இலவச மாதிரித் தேர்வு – கல்வி விகடன்
TNPSC Group 4 ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் TNPSC குரூப்-4 தேர்வுக்குப் பலரும் தயாராகி வருகிறார்கள்.
குரூப்-4 தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் நட்ராஜ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் TNPSC-யும் இணைந்து குரூப்-4 தேர்வுக்கான மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தினம் ஒரு மாதிரித் தேர்வு என்ற அடிப்படையில் ஜூன் 8-ம் வரை நடைபெறும். கிட்டதட்ட 35 நாட்களுக்கு இந்த மாதிரித் தேர்வை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. அனுபவமுள்ள நிபுணர்கள் பலர் அதிகப்படியான உழைப்பைச் செலுத்தி சிறப்பான கேள்வித்தாள்களை தயார் செய்துள்ளனர். இந்த மாதிரித் தேர்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கிவிடும். அடுத்த நாள் காலை 9 மணிவரை அந்தத் தேர்வை எழுதலாம். காலை 9 மணிக்குப் பிறகு அந்த நாளுக்கான வினாத்தாள் வெளியாகும்.
இன்றைய நாளுக்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் காலை 9 மணிக்கு வெளியாகிவிட்டது. கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த மாதிரி தேர்வு உடனடியாக எழுதுங்கள். இந்த மாதிரித் தேர்வு குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தெளிவான விவரங்களை படியுங்கள்.
இந்த மாதிரித் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் எதுவுமில்லை. அனைவருக்கும் இலவசம். ஒவ்வொரு நாளும் நடைபெறும் இந்த மாதிரி தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்களுக்குள் தேர்வை நிறைவு செய்யவேண்டும்.
கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்கு விடையளித்த பிறகு உங்களின் மதிப்பெண்களை நீங்கள் அறியலாம். இதுமட்டுமின்றி நீங்கள் தவறாக விடையளித்த கேள்விகளுக்கான சரியான பதிலையும் தெரிந்து கொள்ளலாம்.
![TNPSC குரூப் 4 - க்கு இலவச மாதிரித் தேர்வு - கல்வி விகடன் 2 07887fad71072770a154443a550aa0bd0c86d64d5f8b781501bdbe89d0f892cb Tamil Mixer Education](https://tamilmixereducation.com/wp-content/uploads/2024/05/07887fad71072770a154443a550aa0bd0c86d64d5f8b781501bdbe89d0f892cb.webp)
பழைய வினாத்தாள்கள், பாடத்திட்டங்களில் இருந்து நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்ட கேள்விகள் இந்த மாதிரித் தேர்வில் கேட்கப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு எழுதி பழகுவதற்கும் நீங்கள் படித்தவற்றை நினைவுப்படுத்தி பார்ப்பதற்கும் குரூப் 4 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்கும் இந்த மாதிரித் தேர்வு உங்களுக்கு உதவும்.