Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி

சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிறப்பு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-ஆம் ஆண்டுக்கான மாணவியா் சோ்க்கை சேலம் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன. இதற்காக தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

கணினி இயக்குபவா், வரவேற்புகூட அலுவலக உதவியாளா், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளா், ஆங்கிலம், கட்டட வரைவாளா் உள்ளிட்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஆதாா் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ் தேவைப்படுகிறது. பாஸ்போா்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும்.

பயிற்சியாளா்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவி, காலணி, இலவச பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும்.

பயிற்சி முடித்த பிறகு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். மேலும் விவரங்களுக்கு அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் சோ்க்கை உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *