முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) – TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/dd-a-subheading-14-1024x570.png)
முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) – TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.
முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை.
· சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் மீது பாடப்பெற்ற இலக்கியம் முத்தொள்ளாயிரம்.
· ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
· மொத்த பாடல்கள் (3X300) 900, கிடைத்தவை 109 பாடல்கள்.
· 109 பாடல்களும், புறத்திரட்டு என்னும் நூலில் இருந்து திரட்டப்பட்டன
· இது விருந்து என்னும் தொல்காப்பிய வனப்பு வகையைச் சார்ந்தது.
· சேரன் – வில் கொடி – மரபுப்பெயர் கோதை
· சோழன் – புலி கொடி – மரபுப்பெயர் செம்பியன்
· பாண்டியன் – மீன் கொடி – மரபுப்பெயர் மாறன்
வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது. மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது. நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார். சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்க்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது.
ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர். பிற்காலக் காப்பியங்களில் நாட்டுவளம் தவறாது இடம்பெற்றது. முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇