![](https://examstar.in/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-20-at-12.18.20-PM.jpeg)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இலவச தொழில் பயிற்சி
![](https://examstar.in/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-20-at-12.18.20-PM-1024x576.jpeg)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இலவச தொழில் பயிற்சி
பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் மே 14 முதல் 30 வரை இலவச தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இங்கு மே 14 ல் பினாயில், சோப் ஆயில், பவுடர் தயாரித்தல், மே 15 முதல் 16 வரை சாம்பிராணி, ஊதுபத்தி, பூஜை பொருட்கள் தயாரித்தல், மே 18 ல் தேனீ வளர்ப்பு, மே 21 ல் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு, மே 22ல் மாம்பழத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி, மே 23ல் ஆடு, கோழி வணிக ரீதியான தீவனம் தயாரித்தல் பயிற்சி, மே 24 ல் பாலில் இருந்து மதிப்பு கூட்டுதல், பொருள் தயாரித்தல், மே 28ல் காளான் வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல், மே 20 முதல் 28 வரை வாழை நாரில் இருந்து கலை பொருட்கள், மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரித்தல், மே 29 முதல் 30 வரை சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டல் பொருள் தயாரித்தல் ஆகிய பல்வேறு தொழில்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.