TNPSC Question – சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 – 2023
PublishedApril 27, 2024
Table of Contents
சாகித்திய அகாதமி விருது:
- சாகித்ய அகாடமி விருது, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும்.
- ஒவ்வோராண்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 மொழிகளில் சிறந்த படைப்பு ஒன்றைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.
- சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.
பின்னணி:
சாகித்ய அகாடமி அமைப்பு, இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும், எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தவும், இலக்கியச் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 1954 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை பெற்ற ஒரு அமைப்பு.
பணி:
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு உலகலாவிய இலக்கியங்களை மொழிபெயர்ப்பதுடன், சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து படைப்பாளர்களை விருதளித்து அங்கீகரிப்பது, சிறந்த ஆளுமைகளின் புத்தகங்களை வெளியிடுவது, படைப்பாளிகளை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளையும் செய்கிறது.
முதல் தமிழ் நூல்:
1955ம் ஆண்டு முதன்முதலில் தமிழ் மொழிக்கான விருது, “தமிழ் இன்பம்” என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
தேர்வு செய்யும் முறை:
- ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்ய, சாகித்ய அகாடமி நிர்வாகம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி குழுவை அமைக்கும்.
- அக்குழு குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும்.
- ஒவ்வொரு கருத்தாளரும் இரண்டு நூல்களை பரிந்துரை செய்வார்கள்.
- அவ்விதம் பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு. ஒரு நூலை ஏகமனதாக தேர்வு செய்யும்.
- அந்த ஆண்டில் சிறந்த நூல்கள் ஏதும் வரவில்லை என்று கருதினால் கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 1955 – 2023
ஆண்டு | படைப்பு | ஆசிரியர் | குறிப்பு |
---|---|---|---|
2023 | நீர்வழிப் படூஉம் | தேவி பாரதி | புதினம் |
2022 | காலா பாணி | மு. ராஜேந்திரன் | புதினம் |
2021 | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை | அம்பை | சிறுகதைத் தொகுப்பு |
2020 | செல்லாத பணம் | இமையம் | புதினம் |
2019 | சூல் | சோ. தர்மன் | புதினம் |
2018 | சஞ்சாரம் | எஸ். ராமகிருஷ்ணன் | புதினம் |
2017 | காந்தள் நாட்கள் | இன்குலாப் | கவிதைகள் |
2016 | ஒரு சிறு இசை | வண்ணதாசன் | சிறுகதைகள்(1) |
2015 | இலக்கியச் சுவடுகள் | ஆ. மாதவன் | புதினம் |
2014 | அஞ்ஞாடி | பூமணி | புதினம் |
2013 | கொற்கை | ஜோ டி குரூஸ் | புதினம் |
2012 | தோல் | டேனியல் செல்வராஜ் | புதினம் |
2011 | காவல் கோட்டம் | சு. வெங்கடேசன் | புதினம் |
2010 | சூடிய பூ சூடற்க | நாஞ்சில் நாடன் | சிறுகதைகள் |
2009 | கையொப்பம் | புவியரசு | கவிதை |
2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைகள் |
2007 | இலையுதிர் காலம் | நீல. பத்மநாபன் | புதினம் |
2006 | ஆகாயத்துக்கு அடுத்த வீடு | மு.மேத்தா | கவிதை |
2005 | கல்மரம் | ஜி. திலகவதி | புதினம் |
2004 | வணக்கம் வள்ளுவ | ஈரோடு தமிழன்பன் | கவிதை |
2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து | புதினம் |
2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி பாலசுப்ரமணியம் | கவிதை |
2001 | சுதந்திர தாகம் | சி. சு. செல்லப்பா | புதினம் |
2000 | விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் | தி. க. சிவசங்கரன் | விமர்சனம் |
1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | கவிதை |
1998 | விசாரணைக் கமிஷன் | சா. கந்தசாமி | புதினம் |
1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | நாவல் |
1996 | அப்பாவின் சிநேகிதர் | அசோகமித்ரன் | சிறுகதைகள் |
1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | புதினம் |
1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) | புதினம் |
1993 | காதுகள் | எம். வி. வெங்கட்ராம் | புதினம் |
1992 | குற்றாலக் குறிஞ்சி | கோவி. மணிசேகரன் | புதினம் |
1991 | கோபல்ல கிராமத்து மக்கள் | கி. ராஜநாராயணன் | புதினம் |
1990 | வேரில் பழுத்த பலா | சு. சமுத்திரம் | புதினம் |
1989 | சிந்தாநதி | லா. ச. ராமாமிர்தம் | சுயசரிதை |
1988 | வாழும் வள்ளுவம் | வா. செ. குழந்தைசாமி | இலக்கிய விமர்சனம் |
1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் | சிறுகதைகள் |
1986 | இலக்கியத்துகாக ஒரு இயக்கம் | க. நா. சுப்பிரமணியம் | இலக்கிய விமர்சனம் |
1985 | கம்பன் : புதிய பார்வை | அ. ச. ஞானசம்பந்தன் | இலக்கிய விமர்சனம் |
1984 | ஒரு காவிரியைப் போல | லட்சுமி திரிபுரசுந்தரி | புதினம் |
1983 | பாரதி : காலமும் கருத்தும் | தொ. மு. சிதம்பர ரகுநாதன் | இலக்கிய விமர்சனம் |
1982 | மணிக்கொடி காலம் | பி. எஸ். ராமையா | இலக்கிய வரலாறு |
1981 | புதிய உரைநடை | மா. ராமலிங்கம் | விமர்சனம் |
1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | புதினம் |
1979 | சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன் | சிறுகதைகள் |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | விமர்சனம் |
1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | புதினம் |
1975 | தற்கால தமிழ் இலக்கியம் | ஆர். தண்டாயுதம் | இலக்கிய விமர்சனம் |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | கே. டி. திருநாவுக்கரசு | இலக்கிய விமர்சனம் |
1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | புதினம் |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | நாவல் |
1971 | சமுதாய வீதி | நா. பார்த்தசாரதி | புதினம் |
1970 | அன்பளிப்பு | கு. அழகிரிசாமி | சிறுகதைகள் |
1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
1968 | வெள்ளைப் பறவை | அ. சீனிவாச ராகவன் | கவிதை |
1967 | வீரர் உலகம் | கி. வா. ஜகன்னாதன் | இலக்கிய விமர்சனம் |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம. பொ. சிவஞானம் | சரிதை நூல் |
1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி. ஸ்ரீ ஆச்சார்யா | சரிதை நூல் |
1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் (பி. வி. அகிலாண்டம்) | புதினம் |
1962 | அக்கரைச்சீமை | சோமு (மீ. ப. சோமசுந்தரம் | பயண நூல் |
1961 | அகல் விளக்கு | மு.வரதராசனார் | புதினம் |
1958 | சக்கரவர்த்தித் திருமகன் | சி. ராஜகோபாலச்சாரி | உடைநடை |
1956 | அலை ஓசை | கல்கி கிருஷ்ணமூர்த்தி | புதினம் |
1955 | தமிழ் இன்பம் | ரா. பி. சேதுப்பிள்ளை | கட்டுரை |