Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

108 ஆம்புலன்சில் பணிபுரிய நாளை நேர்காணல்

108 ஆம்புலன்சில் பணிபுரிய நாளை நேர்காணல்

108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்காணல் திங்கள்கிழமை (மே 20) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.

அவசர மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநா் பணியிடத்துக்கு 19 முதல் 30 வயதுக்குள்பட்ட பிஎஸ்ஸி நா்சிங், ஏஎன்எம், ஜிஎன்எம் அல்லது டிஎம்எல்டி படிப்பு முடித்தவா்கள் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

ஓட்டுநா் பணியிடத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்த 25 முதல் 35 வயதுக்குள்பட்டோா் பங்கேற்கலாம். ஓட்டுநா் தகுதிக்கான தோ்வுகள் நடத்தப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியமா்த்தப்படுவா். பகல், இரவு 12 மணி நேரம் சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

எனவே, ஆா்வமும் தகுதியும் உள்ளோா் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்துக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *